பூமியை நோக்கி அசுர வேகத்தில் வரும் கோள்… பதற வைக்கும் தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,August 27 2020]
பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்றும் அது பூமிமீது மோதினால் பயங்கர ஆபத்தினை ஏற்படுத்தும் என்றும் கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்தத் தகவலை ஆய்வுசெய்து பார்த்த நாசா விஞ்ஞானிகள் பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வருவது உண்மைதான் என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல், மழை, நிலநடுக்கம், வெடிவிபத்து என 2020 இன் தொடக்கத்தில் இருந்தே அடுக்கடுக்கான பிரச்சனைகளை இந்த உலகம் சந்தித்து வருகிறது. இந்நிலையில் பூமியை நோக்கி ஒரு கோள் வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலை சிலர் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி இருக்கின்றனர். அதில் “பூமியை நோக்கி வேகமாக ஒரு கோள் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கோள் பூமிப்பந்தின்மீது மோதும்போது கடும் ஆபத்தை இந்த பூமி சந்திக்க வேண்டிவரும். அதுவும் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய நாளே இது நடக்கவிருக்கிறது” எனச் சமூக வலைத்தளத்தில் கடும் பீதியை கிளப்பியிருக்கின்றனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நாசா விஞ்ஞானிகள் பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வந்து கொண்டிருப்பது உண்மைதான். அது 6.41% அடி நீளமுடையது. வேகமாக வரும் இந்தக் கோள் பூமியில் இருந்து 2,60,000 கி.லோ மீட்டர் தூரத்திலேயே நின்றுவிடும். ஒருவேளை பூமிக்குள் நுழைந்தால் அதன் தன்மைக் காரணமாக வளிமண்டலத்திலேயே நொறுங்கிவிடும் எனத் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.