சோனு சூட் ஆரம்பித்து வைத்த அடுத்த பொதுசேவை: இரண்டு மாநில மக்கள் மகிழ்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையில் வில்லனாக நடித்தாலும் கொரோனா லாக்டவுன் நேரத்தில் லட்சக்கணக்கான மக்களின் மனதில் ஹீரோவாக மாறியவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே.
ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊர் செல்வதற்கு சோனுசூட் செய்த உதவியும், பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்தது, பல ஏழை மக்களுக்கு உதவி செய்தது உள்பட அவர் செய்த பல்வேறு உதவிகள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.
மேலும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் சோனு சூட் அவர்களுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய பொது சேவையை சோனுசூட் தொடங்கியுள்ளார்.
சோனுசூட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் என்ற ஒரு ஆம்புலன்ஸ் சேவையை அவர் துவக்கி வைத்துள்ளார். இந்த ஆம்புலன்ஸ் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆம்புலன்சில் அனைத்து வகையான வசதிகளும் உள்ளன என்பதும் அதி நவீன வசதிகள் கொண்ட இந்த ஆம்புலன்ஸ் சேவை ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இருமாநில மக்களுக்கும் மிகப்பெரிய வகையில் உதவும் என்றும் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சோனு அவர்களின் தொடர்ச்சியான செய்து வரும் சமூக சேவை காரணமாக அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
An ambulance service started on #SonuSood’s name .. called Sonu sood ambulance service.
— dineshkoya (@dineshkoya1) January 19, 2021
This will be spread across states of Andhra and Telangana to help the needy patients who can’t afford medical facilities.
Sonu Sood #SonuSoodAmbulanceService pic.twitter.com/shYvKll7S2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments