விஜயகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்: பிரபல ஹீரோ பாராட்டு

நேற்று சென்னையில் கொரோனாவால் பலியான மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தியதும் அதன் பின்னர் போலீசார் தலையிட்டு போராட்டம் நடத்திய 20 பேரை கைது செய்ததும் தெரிந்ததே. கொரோனா பாதித்த நோயாளிகளை குணப்படுத்திய மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியான நிலையில் அவருடைய உடலை அடக்கம் செய்ய முடியாமல் எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று விடுத்த ஒரு அறிக்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தார்.

விஜயகாந்த்தின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான பவன்கல்யாண் தனது சமூக வலைத்தளத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் திரு விஜயகாந்த் அவர்களின் இந்த அறிவிப்பு மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. சூப்பர் ஸ்டாரான அவரது மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்துகிறது. தன்னுடைய கல்லூரி நிலத்தை கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அவர் கொடுக்க முன்வந்திருப்பது மிகப்பெரிய செயல் என்று கூறியுள்ளார்.

More News

கொரோனா நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சீனா!!! தக்கப் பதிலடி கொடுத்த இந்தியா!!!

கொரோனா கோரத் தாண்டவத்தில் இருந்து தற்போது சீனா மீண்டு வந்திருக்கிறது.

கொரோனா பரவல்: தொடரும் குற்றச்சாட்டுகளுக்கு சீனாவின்  வுஹான் ஆய்வகம் விளக்கம்!!!

கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்பட்டன.

அலட்சியத்தால், கொரோனா நோயாளியை அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த மருத்துவர்!!!

அலிகார் முஸ்லீம் பல்கழைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட AMU ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷாருக்கான் கேரக்டரில் நடிக்க விரும்பும் தளபதி விஜய்!

தளபதி விஜய் தான் நடித்து வரும் பெரும்பாலான படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களை தவிர்த்துவிடுவார் என்பதும், அவர் மாஸ் ஹீரோ கேரக்டர்களையே விரும்பி நடிப்பார் என்பதும் தெரிந்ததே

ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்காக ரேபிட் கிட் கருவிகளை சீனாவிலிருந்தும் தென்கொரியாவில் இருந்தும் தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களும்,