விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..! குழந்தைக்கு கட்டிய தொட்டிலால் இறந்த 11 வயது சிறுமி!
Send us your feedback to audioarticles@vaarta.com
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கை குழந்தைக்கு கட்டப்பட்ட தொட்டிலில் விளையாடிய 11 வயது சிறுமி, கழுத்து இறுகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த வடிவேல், என்பவரின் 11 வயது மகள் அஸ்வதி, சென்னை அயனாவரத்தில் உள்ள தன்னுடைய மாமா வினோத் குமார் வீட்டில் கோடை விடுமுறையை கொண்டாட வந்துள்ளார்.
இந்நிலையில் வினோத் குமாரின் குழந்தைக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரும் அவருடைய மனைவியும் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.
சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கைக்குழந்தைக்கு கட்டப்பட்ட, சேலை தொட்டிலை வைத்து அஸ்வதி விளையாடியுள்ளார். திடீர் என சேலையில் அவருடைய கழுத்து இறுகியுள்ளது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
எதிர்பாராதவிதமாக சிறுமியின் சித்தப்பா ஈஸ்வரன் என்பவர் வினோத் குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார். கதவு உள்பக்கம் பூட்டி இருந்ததால் வெகு நேரமாக கதவை தட்டினார். யாரும் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார். அங்கு சிறுமி அஸ்வதி, தொட்டிலில் கழுத்து இறுகிய நிலையில் சாய்ந்து கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த ஈஸ்வரம், சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுமியை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவர்கள் அஸ்வதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சேலையால் கழுத்து இறுகி சிறுமி இறந்தது உறுதி செய்யப்பட்டது. கோடை விடுமுறைக்காக வந்த சிறுமி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com