சம்மருக்கு இதுதான் சரி… 'அனேகன்' பட நடிகையின் நீச்சல் உடைக்கு ரசிகர்கள் 'நச்' கமெண்ட்!

  • IndiaGlitz, [Thursday,May 11 2023]

தமிழ் சினிமாவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ திரைப்படத்தில் நடித்து க்யூட்டான ரியாக்ஷன் மூலம் இளம் ரசிகர்களின் இதயத்தை தீப்பிடிக்க வைத்தவர் நடிகை அமைரா தஸ்தூர். சோஷியல் மீடியா பிரபலமாக இருந்துவரும் இவர் வெளியிட்டுள்ள நீச்சல் உடை புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

2013 இல் வெளியான ‘இசாக்’ திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இதற்குப் பிறகு 2015 இல் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். க்யூட்டான ரியாக்ஷன், ஸ்லிம் பியூட்டி என்று எப்போதும் நடிகை அமைராவிற்கு தமிழ் ரசிகர்களிடையே ஒரு தனி வரவேற்பு இருந்துவருகிறது.

இந்நிலையில் பாலிவுட், தெலுங்கு மொழி சினிமாக்களிலும் கவனம் செலுத்திவந்த இவருக்கு சமீபத்தில் அதிகபட வாய்ப்புகள் இல்லாமலே இருந்தது. இதனால் சோஷியல் மீடியா மற்றும் மாடலிங்கில் தனிக்கவனம் செலுத்திவரும் அவர் சமூகவலைத் தளங்களில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். அந்த வகையில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கடற்கரை பகுதிக்குச் சென்றுவிடும் நடிகை அமைரா தொடர்ந்து நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது வீட்டில் இருந்து நேராக குளத்திற்கு என்று குறிப்பிட்டு புதிய நீச்சல் உடை புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அமைரா பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கோடை காலத்திற்கு இதுதான் சரி என்றும் ஸ்லிம் பியூட்டி என்றும் குறிப்பிட்டு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.