தயாரிப்பாளராக மாறினார் எமிஜாக்சன்

  • IndiaGlitz, [Friday,March 31 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' திரைப்படத்தின் நாயகி எமிஜாக்சன் தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் தயாரிக்கவிருப்பது திரைப்படம் அல்ல என்பதும், அது ஒரு குறும்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை எமிஜாக்சன் விலங்குகள் நல ஆர்வலர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை தோலுரிக்கும் வகையில் குறும்படம் ஒன்றை எமி ஜாக்சன் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் எமி நடிக்கவில்லை என்றாலும் விலங்குகளுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்த தனது அனுபவங்களை அவர் குரல் வடிவில் கூறவுள்ளார். இந்த குறும்படத்தில் சில உண்மைச்சம்பவங்களும் இணைக்கப்பட்டுள்ளதாம்.

விலங்குகள் மீதான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற குறும்படங்கள் அவசியம் ஆகிறது என்றும், இந்த விஷயம் அனைவரும் சீரியஸாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் எமிஜாக்சன் கூறியுள்ளார்.

More News

நகைக்கடைக்காரர் மகளுடன் அனிருத் திருமணம் உண்மையா?

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் இளம் இசைப்புயல் அனிருத் திருமணம் குறித்த செய்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. அனிருத் நகைக்கடை உரிமையாளர் ஒருவரது மகளை திருமணம் செய்யவிருப்பதாகவும்,  வரதட்சணையாக நவீன ரிகார்டிங் ஸ்டுடியோ ஒன்றை அவர் அனிருத்துக்கு கொடுக்கவிருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன...

விஜய்சேதுபதியின் 'கவண்' படத்திற்கு கிடைத்த கூடுதல் போனஸ்

விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இன்றைய ஓப்பனிங் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

40 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்த ரஜினி-லதா

கடந்த 70களில் எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை லதா.

ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு மீண்டும் ஒரு ரஜினி டைட்டில்

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே ரஜினியின் சூப்பர் ஹிட் வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற டைட்டிலில் ஒரு படம் நடித்து அப்படம் சமீபத்தில் வெளிவந்தது.

திருப்பதி அருகே பாலாஜி கோவிலில் அர்ச்சனை செய்யும் இஸ்லாமியர்கள்

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து 120 கிமீ தூரத்தில் உள்ள கடப்பா பகுதியில் உள்ள பாலாஜி கோவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கி வருகிறது.