டிடிவி தினகரனுக்கு ஆதரவாக '2.0' நாயகி பிரச்சாரம்? காரணம் தொப்பியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறந்து கொண்டு வரும் நிலையில் பிரபல நடிகையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் நாயகியுமான எமிஜாக்சன் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா அதிமுக அணியின் வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் தொப்பி சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்த சின்னத்தை எப்படியாவது மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று இந்த அணியினர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எமிஜாக்சன் நடித்த முதல்படமான 'மதராஸ பட்டணம்' படத்தில் அவர் தொப்பி அணிந்து நடித்திருப்பார். இந்த தொப்பி அவரது முகத்திற்கு பொருத்தமாக இருந்ததால் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே அதே தொப்பியுடன் அவர் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் அணியினர் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு நடிகை எமிஜாக்சன் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடைசி நேரத்தில் மேலும் பல முன்னணி நடிகைகளை பிரச்சாரத்தில் ஈடுபட செய்ய தினகரன் அணியினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments