நீங்கள் ஏன் அம்மா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்? நடிகையின் மகன் கேட்ட கேள்வி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகையிடம் அவருடைய மகன் ’நீங்கள் ஏன் அம்மா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்’ என்று கேள்வி கேட்டதாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் , விக்ரம் உட்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை எமி ஜாக்சன். சமீபத்தில் இவர் அருண் விஜய் உடன் நடித்த ’மிஷின் சாப்டர் ஒன்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிப்படமாக உருவாகியது என்பதை தெரிந்தது.
இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2019 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தற்போது எமி ஜாக்சன் எட் வெஸ்டிக் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் எமி ஜாக்சன் தனது காதலரிடம் காதலை ப்ரொபோஸ் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த எமி ஜாக்சன் ’எனது மகனும் எனது காதலரும் மிகச் சிறந்த நண்பர்களாக உள்ளார்கள், என்னிடம் நீங்கள் ஏன் அம்மா திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டதில் இருந்து எனது மகன் எனது காதலை புரிந்து கொண்டான் என்றே நான் எண்ணுகிறேன். அதேபோல் என் காதலரிடம் ‘என் அம்மாவை இன்னும் ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் கேட்டுள்ளான். எனவே எங்கள் காதலுக்கு என் மகன் சிக்னல் கொடுத்துவிட்டதை அடுத்து விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments