பிகினியில் புதுமை செய்த பிரபல நடிகை? இணையத்தில் தீயாய் பரவும் ஹாட் புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,July 05 2023]

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்துவரும் நடிகை ஒருவர் கடற்கரையில் பென்குயின் போன்று பிகினி அணிந்து நின்றிருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் தாறுமாறான கமெண்ட்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘மதராசப்பட்டிணம்’ திரைப்படத்தில் ஆங்கிலேயே பெண்ணாக நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றவர் நடிகை எமி ஜாக்சன். உண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்தவரான இவர் தொடர்ந்து நடிகர் விக்ரம், விஜய், தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

குறைந்த நாட்களிலேயே பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவந்த நடிகை எமி ஜாக்சன் பேஷன் விஷயங்களில் தீவிர ஆர்வம் காட்டி வருபவர். அந்த வகையில் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய போட்டோஷுட் புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார். அது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக சினிமாவில் நடித்து வந்த நடிகை எமி ஜாக்சன், ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவர் மூலமாக ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததும் பின்னர் அவரை விட்டு கடந்த 2019 இல் பிரிந்ததும் ரசிகர்கள் அறிந்ததுதான்.

தற்போது அமெரிக்க தொலைக்காட்சி தொடர் மற்றும் ஒருசில திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்துவரும் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை நடிகை எமி ஜாக்சன் காதலித்து வருகிறார். கடந்த 2 வருடங்களாக தனது காதலருடன் பல்வேறு இடங்களில் மகிழ்ச்சியாக சுற்றி வரும் இவர் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்துகிறார்.

இந்நிலையில் தற்போது நீல நிற கடற்கரை, அமைதியான நிலா என்று இயற்கையின் ஒட்டுமொத்த அம்சத்திற்கும் நடுவே நின்று பிகினி அணிந்திருக்கும் புகைப்படத்தை நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார். இதில் வெறுமனே பிகினி மட்டுமல்ல, தலையில் ஒரு கருப்பு நிற ஹுடியை மாட்டியிருப்பதால் பார்ப்பதற்கு கடற்கரையில் ஒரு அழகான பென்குயின் தனது இரண்டு கால்களை தூக்கிக்கொண்டு நிற்பது போலவே இருக்கிறது.

பார்ப்பதற்கு செம அசத்தலாக இருக்கும் இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. மேலும் ரசிகர்கள் இவரது புதிய முயற்சிக்கு பாராட்டுகளைக் குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.