close
Choose your channels

எமிஜாக்சனின் டூப் இல்லாத ஆக்சன் காட்சி: வைரலாகும் '2.0' வீடியோ

Tuesday, November 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி எமி ஜாக்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு ஆக்சன் காட்சியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரெ ஒருசில ஆக்சன் காட்சிகள் சென்னையில் பயிற்சி எடுக்கப்பட்டதாகவும், இந்த வீடியோவில் இருப்பது தனது முதல் பயிற்சி வீடியோ என்றும் குறிப்பிட்டு ஒரு வீடியோவை எமி ஜாக்சன் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் ஒவ்வொன்றையும் ஸ்லோமோஷனில் படமாக்கப்பட்டதாகவும், அப்போதுதான் செய்யும் தவறுகளை தெளிவாக புரிந்து திருத்தி கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். பைக்கில் இருந்து ரோப் உதவியால் அந்தரத்தில் எமிஜாக்சன் பல்டி அடிக்கும் காட்சி திரையில் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment