எமிஜாக்சனின் டூப் இல்லாத ஆக்சன் காட்சி: வைரலாகும் '2.0' வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,November 27 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி எமி ஜாக்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு ஆக்சன் காட்சியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரெ ஒருசில ஆக்சன் காட்சிகள் சென்னையில் பயிற்சி எடுக்கப்பட்டதாகவும், இந்த வீடியோவில் இருப்பது தனது முதல் பயிற்சி வீடியோ என்றும் குறிப்பிட்டு ஒரு வீடியோவை எமி ஜாக்சன் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் ஒவ்வொன்றையும் ஸ்லோமோஷனில் படமாக்கப்பட்டதாகவும், அப்போதுதான் செய்யும் தவறுகளை தெளிவாக புரிந்து திருத்தி கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். பைக்கில் இருந்து ரோப் உதவியால் அந்தரத்தில் எமிஜாக்சன் பல்டி அடிக்கும் காட்சி திரையில் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

More News

'ஆரண்ய காண்டம்' படம் இன்னும் முழுதாக வெளிவரவில்லை: திலீப் சுப்பராயன்

இந்திய சினிமாவில் சிறந்த 10 படங்களை தேர்வு செய்தால் அதில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'ஆரண்ய காண்டம்' திரைப்படம் நிச்சயம் இடம்பெறும்.

அரசியல் அவ்வளவு ஈசி அல்ல: கமல், ரஜினிக்கு விஜயசாந்தி அறிவுரை

தமிழகத்தில் நடைபெறவுள்ள அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் ஆகும்.

அஜித் ஒப்புக்கொள்ளாத ஒரே விஷயம்: திலீப் சுப்பராயன்

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விஸ்வாசம் திருவிழா ஆரம்பமாகிவிட்ட நிலையில் இந்த படத்தை பொங்கல் அன்று வரவேற்க இப்பொழுது முதலே அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

கேரள முதல்வரிடம் கமல்ஹாசன் கேட்ட உதவி

உலக நாயகன் கமல்ஹாசனும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் நெருக்கமானவர்கள் என்பது தெரிந்ததே. கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், ஆரம்பித்த பின்னரும் பினரயி விஜயன் அவர்களை

பிரபுதேவாவின் 'சார்லி சாப்ளின் 2: சென்சார் தகவல்கள்

பிரபுதேவா, பிரபு நடித்த 'சார்லி சாப்ளின்' திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் இந்த' படத்தின் இரண்டாம் பாகமான 'சார்லி சாப்ளின் 2' திரைப்படம்