இயற்கை மீது இவ்வளவு அக்கறையா? பிகினி உடையில் பிரச்சாரம் செய்த நடிகை எமி ஜாக்சன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினமா ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற நடிகையான எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் உணவு மற்றும் இயற்கை குறித்த முக்கியமான கருத்து ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற அழகி போட்டியில் மிஸ் டீன் வேர்ல்ட் பட்டம் வென்றவர் எமி ஜாக்சன். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் வசித்துவந்த அவர் 15 வயதிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதன் விளைவாக அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிரபல காமிக்ஸ் தொடரில் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.
இந்தத் தருணத்தில் தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2010 இல் வெளியான ‘மதராசபட்டிணம்’ திரைப்படத்தில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். இதையடுத்து ‘2.0’, ‘தாண்டவம்‘, ‘தங்கமகன்‘, ‘தெறி’ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் ‘போகி மேன்’ எனும் ஆங்கிலத் திரைப்படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தையைப் பெற்றுக்கொண்ட நடிகை எமி ஜாக்சன் தனது மகன் ஆண்ட்ரியாஸ் மற்றும் காதலர் எட் வெஸ்ட்விக்குடன் வசித்து வருகிறார். மேலும் சமீபத்தில் இந்தியா வந்த இவர்கள் ராஜஸ்தான் பகுதியில் உள்ள பழமையான பல இடங்களை சுற்றிப் பார்த்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வரும் நடிகை எமி ஜாக்சன் தொடர்ந்து பிகினி உடை புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் எப்போதும்போல பிரவுன் நிறத்தில் பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன் கூடுதலாக ‘வீகன்’ உணவை உட்கொள்ளுமாறு தெரிவித்து இருக்கிறார்.
வீகன் என்றால் விலங்குகளிடம் இருந்து பெறப்படக் கூடிய பால், தயிர், பாலாடைக் கட்டி, வெண்ணெய் போன்ற பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இப்படி சைவ உணவுகளை (தாவர) உணவுகளை உட்கொள்ளாமல் அசைவ உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளையும் நடிகை எமி ஜாக்சன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
அதில் அசைவ உணவுகளை உட்கொள்வதால் ‘காடழிப்பு, நீர் வீணாதல், நீர் மாசுபடுதல், பெரிய அழிவு மற்றும் காலநிலை மாற்றங்கள்’ இவையெல்லாம் ஏற்படுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நடிகை எமி ஜாக்சன் விலங்குகளை உட்கொள்வதால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் மற்றும் அழிப்பு நடவடிக்கைகள் நடப்பதாகக் கூறி வீகன் உணவுக்கு மாறுங்கள் எனக் கூறியிருக்கும் இன்ஸ்டா பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆனால் இயற்கை மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறீர்களே? தோலால் செய்யப்பட்ட பைகளைப் பயன்படுத்துகிறீர்கள், கூடவே அடிக்கடி விமானங்களில் பறந்து காற்றை மாசுபடுத்துகிறீர்கள்.? அப்போதெல்லாம் உங்களது அக்கறை எங்கே போயிற்று என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி வீகன் உணவு குறித்து நடிகை எமி ஜாக்சன் பதிவிட்டுள்ள கருத்துகள் மீது பல எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் அவருடைய பதிவிற்கு பாராட்டுகளை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments