ரஜினியின் 'எந்திரனுக்கு ஜல்லிக்கட்டால் சிக்கல்?

  • IndiaGlitz, [Friday,December 18 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட எந்திரன் 2' படத்திற்கு எமிஜாக்சனால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற மனுவில் எமிஜாக்சன் உள்பட பல பாலிவுட் நடிகைகள் கையெழுத்திட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழர் அமைப்பு ஒன்று ரஜினியின் 'எந்திரன் 2' படத்தில் இருந்து எமிஜாக்சனை நீக்க வேண்டும் என்றும் மூன்று நாட்களுக்குள் அவரை நீக்கும் அறிவிப்பு வரவில்லை என்றால் ரஜினி மற்றும் ஷங்கர் வீட்டு முன் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழ் படத்தில் நடித்து பணம் சம்பாதிக்கும் நடிகை ஒருவர் தமிழர்களின் பண்பாட்டுக்கு எதிராக இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது