close
Choose your channels

அடிக்கிற வெயிலுக்கு இந்த டிரஸ் தான் சரி.. பிகினியில் எமி ஜாக்சனின் செம்ம புகைப்படம்..!

Sunday, June 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் தமிழ் உள்பட இந்திய மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடித்த ’மதராசபட்டினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இதனை அடுத்து அவர் ’தாண்டவம்’ ’தங்க மகன்’ ’தெறி’ ’தேவி’ ’2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ’அச்சம் என்பது இல்லையே’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்த நிலையில் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் எமி ஜாக்சனுக்கு 13 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் உலக கடல் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அது குறித்து தனது கருத்தை தெரிவித்து கடல்களை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவில் தான் அவர் அட்டகாசமான நீச்சல் ஆடையுடன் கூடிய ஒரு புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வச்ச கண் வாங்காமல் பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரு லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment