பிரிட்டிஷ் படத்தில் ஒப்பந்தமாகிய ரஜினி-விஜய் நாயகி

  • IndiaGlitz, [Saturday,July 23 2016]

சமீபத்தில் வெளியான இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவரும், தற்போது ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் '2.0' படத்தின் நாயகியுமான எமிஜாக்சன் பிரிட்டிஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசப்பட்டிணம்'' படத்தின் மூலம் அறிமுகமான எமிஜாக்சன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிசியாக இருக்கும் நிலையில் தற்போது ஆங்கில படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த தகவலை அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
மேலும் நடிப்பு தவிர தனக்கு கிக் பாக்சிங், குதிரையேற்றம், நடனம் ஆகியவற்றிலும் விருப்பம் இருப்பதால் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இதுபோன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு வருவதாகவும் எமிஜாக்சன் கூறியுள்ளார்.