close
Choose your channels

'தெறி' படத்தில் எமிஜாக்சன் கேரக்டர் குறித்த புதிய தகவல்

Thursday, January 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜயகுமார் என்ற ஐ.பி.எஸ் கேரக்டரில் விஜய் நடித்து வருவதும், மித்ரா என்ற டாக்டர் கேரக்டரில் சமந்தா நடித்து வருவதும் நாம் அனைவரும் அறிந்ததே.


இந்நிலையில் இந்த படத்தின் இன்னொரு நாயகியான எமிஜாக்சன் கேரக்டர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. எமிஜாக்சன் இந்த படத்தில் எமி' என்ற கேரக்டரில் டீச்சராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இறுதிக்காட்சியில் விஜய்-சமந்தா திருமணம் நடைபெறுவது போன்ற காட்சி ஒன்று இருப்பதாக கூறப்படுவதால், விஜய்க்கு ஜோடி எமிஜாக்சன் இல்லை என்பது தெளிவாகிறது. இருப்பினும் எமி கேரக்டரின் முக்கியத்துவம் குறித்து படம் வெளிவந்த பின்னர்தான் முழுவதும் தெரியும்.

உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அட்லி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment