close
Choose your channels

'2.0' எமிஜாக்சன் கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

Tuesday, March 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. தற்போது அக்சயகுமார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.


இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடித்து வரும் எமிஜாக்சன் கேரக்டர் குறித்த சில தகவல்களை வெளிவந்துள்ளன. இந்த படத்தின் எமிஜாக்சன் பிரபல வீடியோ கேம் 'டாம்ப் ரைடர்' (Tomb Raider) என்ற கேமில் வரும் முக்கிய கேரக்டருக்கு இணையானது என்றும் அவருடைய கேரக்டருக்கு இந்த படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளும் உள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

பிரிட்டிஷ் வீடியோ கேம் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்திய வீடியோ கேம்தான் Tomb Raider. இந்த கேமில் லாரா கிரஃப்ட் என்ற கேரக்டர் புகழ் பெற்றது. அந்த கேரக்டருக்கு இணையானதுதான் எமிஜாக்சன் '2.0' படத்தில் நடிக்கவுள்ள கேரக்டர் என்று கூறப்படுவதால் வீடியோ கேம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வீடியோவில் அனிமேஷனாக பார்த்த கேரக்டர் விரைவில் வெள்ளித்திரையில் வரவுள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment