close
Choose your channels

சந்தானம்-கருணாஸ் இடத்தில் எமிஜாக்சன்

Wednesday, February 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'எந்திரன்' திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று பெரும் வசூலை வாரிக்குவித்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரோபோவை உருவாக்கும் விஞ்ஞானி மற்றும் ரோபோவாக இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். மேலும் விஞ்ஞானி ரஜினிக்கு சந்தானம் மற்றும் கருணாஸ் ஆகிய இருவரும் உதவியாளர்களாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படத்தில் ரஜினிக்கு உதவியாளராக எமிஜாக்சன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. எமிஜாக்சனும் அவரது நண்பர்களும் ரஜினிக்கு உதவியாளர்களாக சேருவதாகவும், நாளடைவில் ரஜினி மீது எமிஜாக்சனுக்கு காதல் வருவது போன்ற காட்சி இந்த படத்தில் இருப்பதாகவும்

இந்த படத்திற்காக சென்னை அருகே உள்ள தீம் பார்க் ஒன்றில் பிரமாண்டமான செட் தயாராகி வருவதாகவும், தற்போது மலேசியாவில் 'கபாலி' படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த், அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவுடன் '2.0' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

லைகா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment