எமிஜாக்சன் வீட்டில் முக்கிய விசேஷம்: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் விஜய் இயக்கிய ’மதராச பட்டணம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்யின் ’தெறி’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை எமிஜாக்சன். இவர் பிரிட்டனைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் திடீரென கர்ப்பம் ஆனதாக அறிவிக்கப்பட்டது என்பதும் அதன்பின்னர் அவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடதக்கது.
எமிஜாக்சன் தனது குழந்தையின் விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவு செய்து வந்தார் என்பதும், இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது குழந்தை ஆண்ட்ரியாஸ் முதல் பிறந்த நாளை தனது வீட்டில் அவர் விசேஷமாக கொண்டாடி உள்ளார். எமி ஜாக்சன் மற்றும் அவரது கணவர் கலந்து கொண்ட இந்த பிறந்த நாள் விசேஷம் குறித்த வீடியோவை எமிஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் தனது குழந்தையின் பிறந்த நாள் குறித்துக் எமிஜாக்சன் கூறியிருப்பதாவது: நான் தாய்மை அடைந்த தினத்தை நினைத்து நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று கருதுகிறேன். என் குழந்தை ஆண்ட்ரியாஸ் பிறப்பதற்கு முன் என் வாழ்க்கையை நான் நினைவு கூற விரும்பவில்லை. அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக இருந்தது. ஆனால் என் தேவதை குழந்தையை ஒவ்வொரு நாள் காலையிலும் நான் பார்க்கும்போது எனக்கு மிகுந்த உற்சாகம் ஏற்படுகிறது. என குழந்தைக்கு நான் ஒரு ரோல் மாடலாக, பாதுகாவலராக, நண்பராக மற்றும் தாயாக இருக்க விரும்புகிறேன்’ என்று எமிஜாக்சன் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout