நடிகை எமி ஜாக்சனின் காதலர், இவ்வளவு பெரிய நடிகரா? அதிகம் வைரலாகும் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை எமி ஜாக்சன் சமீபத்தில் தனது காதலரான ஹாலிவுட் நடிகர் ஒருவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது சமூகவலைத் தளங்களில் வெளியிட்டு வந்த நிலையில் தற்போது அவர் யார்? என்பது குறித்த தகவல் ரசிகர்களிடையே அதிகம் பரவி வருகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் Miss Teen world உள்ளிட்ட பல்வேறு அழகி போட்டிகளில் பரிசு பெற்ற நிலையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2010 இல் வெளியாகிய ‘மதராசபட்டிணம்’ திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விக்ரமுடன் ‘தாண்டவம்’, விஜய்யுடன் ‘தெறி’, ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய ‘ஐ’ சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ‘ரஜினி 2.0’ போன்ற பல பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் ஜார்ஜ் என்பவரை காதலித்துவந்த இவர், லிவ்விங் டூ கெதர் முறையில் வாழ்ந்துவந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்தார். தொடர்ந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் துருதிஷ்டவசமாக நடிகை எமி ஜாக்சன் 2019 இல் தனது காதலரை விட்டு பிரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நடிகை எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2 வருடத்திற்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்துவரும் இவர்கள் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் தங்களது சமூகவலைத் தளப்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் எட் வெஸ்ட்விக்கின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதையடுத்து நடிகை எமி ஜாக்சன் பல்வேறு தருணங்களில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் படு வைராலான நிலையில் நடிகை எமி ஜாக்சனின் காதலர் யார் என்பது பற்றிய தகவல் இணையத்தில் தேடப்பட்டு வந்தது.
எட் வெஸ்ட்விக் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடரான ‘காசிப் கேர்ள்‘ நிகழ்ச்சியின் முக்கிய நடிகர்களில் ஒருவராக ‘சக் பாஸ்‘ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆங்கில ராக் இசைக்குழுவான ‘தி ஃபில்தி யூத்’ குழுவின் முன்னணி பாடகராகவும் இருந்து வருகிறார்.
இதைத்தவிர இங்கிலாந்தில் ஒளிபரப்பான ‘டாக்டர்ஸ்‘, ‘காசுவாலிட்டி‘, ‘ஆஃப்டர் லைஃப்‘, போன்ற தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய நடிகராக நடித்துள்ளார். மேலும் ‘பிரேக்கிங் அண்ட் என்டரிங்‘, ‘சில்ட்ரன் ஆஃப் மென்‘, ‘சன் ஆஃப் ராம்போ‘ ஆகிய திரைப்படங்களிலும் ‘Kitchen sink’, ‘100 feet’ போன்ற திரைப்படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது 36 ஆவது பிறந்த நாளை நடிகர் எட் வெஸ்ட்விக் கொண்டாடிய நிலையில் அவர் நடிகை எமி ஜாக்சனுடன் இருக்கும் புகைப்படங்களில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com