எமிஜாக்சனுக்கு என்ன குழந்தை? அவரே அறிவித்த வீடியோ

  • IndiaGlitz, [Monday,August 26 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் '2.0', விஜய்யுடன் தெறி' என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த எமி ஜாக்சன், தனது நீண்ட நாள் காதலரான ஜார்ஜ் என்பவரை சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் விரைவில் முறைப்படி நடிக்கவிருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் கர்ப்பமான எமிஜாக்சன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பார்ட்டியில் தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தை ஆண்குழந்தை என்று அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து பெரும் கரகோஷத்துடன் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இதுகுறித்த வீடியோவையும் எமிஜாக்சன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஜார்ஜ் என்பவரை காதலித்து வரும் எமிஜாக்சன், கடந்த காதலர் தினத்தில் தனது காதலரை சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

தேசிய விருதை அடுத்து 'மிஸ் இந்தியா'வை நோக்கி செல்லும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம் திரைப்படம்' அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த நிலையில் தற்போது அவர் போனி கபூர் தயாரிப்பில் ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

உங்கள காலி பண்றதுதான் என் பிளான்: சாண்டியிடம் கவின் ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவினை அவருக்கு நெருக்கமானவர்களே நாமினேஷன் செய்துள்ள நிலையில் கவின் புதிய அவதாரம் எடுத்துள்ளதாக தெரிகிறது

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன்:

ஆக்சன் கிங் அர்ஜுன் சமீபத்தில் விஷால் நடித்த 'இரும்புத்திரை' மற்றும் விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன் ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது ஜெயம்ரவி நடிக்கும்

இணையத்தில் வைரலாகும் 'இந்தியன் 2' படத்தின் கதை! 

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனவுடனே அந்த திரைப்படம் இன்டர்நெட்டில் வெளியாகி வசூலில் பெரும் பகுதியைப் பாதித்து வரும் நிலையில் தற்போது இன்னும் ஒருபடி மேலே போய்

ஜிவி பிரகாஷின் 'டக்கரு பார்வை' ரிலீஸ் குறித்த தகவல்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டு வருவதால் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள், புரமோஷன்கள் தினமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.