மீண்டும் தமிழில் நடிக்க வரும் எமிஜாக்சன்: யாருக்கு ஜோடியாக தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,August 31 2022]

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’மதராச பட்டினம்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் அதன் பிறகு பல தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்தார். இந்த நிலையில் மீண்டும் லண்டனுக்கு அவர் திரும்பிய நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் அவர் ரீ என்ட்ரி ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

‘மதராசப்பட்டினம்’ என்ற திரைப்படத்தில் ஆங்கிலேய பெண் வேடத்தில் அறிமுகமான எமிஜாக்சன் அந்தப் படத்தை அடுத்து பாலிவுட்டில் பிசியானார். அதன் பிறகு தனுஷின் ’தங்கமகன்’ விக்ரமின் ’தாண்டவம்’ விஜய்யின் ’தெறி’ உள்ளிட்ட படங்களில் நடித்த எமிஜாக்சன், கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்த நிலையில் மீண்டும் லண்டன் திரும்பிய எமிஜாக்சன் அங்கு தனது காதலருடன் திருமணம் செய்யாமலே குழந்தை பெற்று அதன் பின் திருமணம் செய்து கொண்டார். இப்போது தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் புதிய காதலருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நாயகியாக எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் பேரனாக நடிக்கின்றாரா நயன்தாரா பட நடிகர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரத்னகுமாரை அடுத்து 'தளபதி 67' படத்தில் இணைந்த மற்றொரு இயக்குனர்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் 'விக்ரம்' என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும்

 ஒரு கொலைக்கு என்ன எல்லாம் காரணம் இருக்கும்? அருண்விஜய்யின் 'சினம்' டிரைலர்

அருண் விஜய் நடித்த 'யானை' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'சினம்' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்க மனசுக்கு பிரதமரே நேரில் சந்திப்பார்.. ரஜினி வீட்டுக்கு சென்ற 'குக் வித் கோமாளி' ஸ்ருதிகா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு 'குக் வித் கோமாளி' சீசன் 3 டைட்டில் வின்னர் ஸ்ருதிகா சென்ற நிலையில் அதுகுறித்து வீடியோவை தனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் ஆனந்த்ராஜை அலறவிட்ட 'கோப்ரா' டீம்!

விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என்பதும் இந்த படம் விக்ரமின் வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டு