'காதலை வெளிப்படுத்திய பிரபல நடிகர்.. 'யெஸ்' கூறி ஏற்றுக் கொண்ட எமி ஜாக்சன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை எமி ஜாக்சனிடம் பிரபல நடிகர் சுவிட்சர்லாந்தில் தனது காதலை வெளிப்படுத்த ‘யெஸ்’ என கூறி அவரும் அந்த காதலை ஏற்றுக் கொண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. ’மதராசபட்டினம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான அவர், அதன் பிறகு ’தாண்டவம்’ ’தங்க மகன்’ ’கெத்து’ ’தெறி’ ’தேவி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் அருண் விஜய்யுடன் நடித்த ’மிஷின் சாப்டர் ஒன்’ திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை எமி ஜாக்சன் திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை எமி ஜாக்சன், பிரபல நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள பனி படர்ந்த பாலம் ஒன்றில் தனது காதலர் காதலை வெளிப்படுத்தியதாகவும் அதை தானும் ஏற்றுக் கொண்டதாகவும் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து எமி ஜாக்சனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com