கோல்டன் பாய் நீரஜ்க்கு சல்யூட் வைத்த அமுல்… அசத்தும் டூடுல் புகைப்படம்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா இந்தியாவிற்கு தடகளப் பிரிவில் முதல் ஒலிம்பிக் தங்கத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் இந்தியாவின் 121 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, 130 கோடி மக்களின் கனவையும் நிறைவேற்றி இருக்கிறார். இதனைக் கொண்டாடும் விதமாக கோல்டன் பாய் நீரஜ் சோப்ராவுக்கு பல கோடிக்கணக்கான பரிசுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் பெரும் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான அமுல் கோல்டன் பாய் நீரஜ்க்கு சிறப்பு டூடுல் உருவாக்கி வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆக்ஸ்ட் 7 ஆம் தேதி நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றபோதே அமுல் நிறுவனம் அவருக்கு பாராட்டுத் தெரிவித்து இருந்தது.

தற்போது அமுல் நிறுவனம் ஒரு சிறுமியின் வடிவில் தோன்றி அவருக்கு சல்யூட் அடிப்பது போன்ற ஸ்பெஷ் டூடுலை வெளியிட்டு இருக்கிறது. ஈட்டி எறிதல் பிரிவில் 87.58 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா இந்தியாவிற்காக தனிநபர் பிரிவில் இரண்டாவது தங்கத்தை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008 ஆம் ஆண்டு குறிப்பார்த்து துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் அபினவ் பிந்திரா தங்கப்பதக்கம் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக நிகழ்வுகளை தனது சிறப்பு விளம்பரமாக மாற்றிவிடும் அமுல் நிறுவனம் நீரஜ்க்கு ஸ்பெஷல் டூடுல் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

More News

3 பாகங்களில் தயாராகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: டைட்டில் மாற்றம் என தகவல்!

விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

என்னை அவர் ஆசிர்வதித்தது நெகிழச்செய்தது: சரத்குமார் பகிர்ந்த புகைப்படம்

வாழ்க்கையில் கடந்து வந்த பாதையின் நிகழ்வுகளை மறக்காமல் நினைவு கொண்டு இருப்பவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்று என்னை அவர் ஆசீர்வதித்து நெகிழச் செய்தது என்று பிரபல நடிகர் சரத்குமார்

நீரஜ் சோப்ரா கொண்டாடப்பட்ட அளவுக்கு இவர் ஏன் கொண்டாடப்படவில்லை?

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ராவை இந்தியாவே கொண்டாடி வருகிறது என்பதும் அவருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்களா? 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, தூத்துக்குடி நகரங்களுக்கு வரப்போகும் கொடிய ஆபத்து… எச்சரிக்கும் நாசா!

பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவது குறித்து உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.