நான் தான் ஜெ.மகள்: டி.என்.ஏ சோதனைக்காக நாளை மனுதாக்கல் செய்கிறார் அம்ருதா

  • IndiaGlitz, [Thursday,November 30 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில் அதிமுகவில் உள்ள குழப்பங்கள் இப்போதுதான் ஒருவழியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் திடீரென ஜெயலலிதாவின் மகள் நான் தான் என்று அம்ருதா என்பவர் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், அவரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. இந்த நிலையில் நாளை அம்ருதா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அந்த மனுவில் சுப்ரீம் கோர்ட்டில் வைத்த கோரிக்கையையே ஐகோர்ட்டிலும் அம்ருதா வைப்பார் என தெரிகிறது. அதாவது நான் தான் ஜெயலலிதா மகள் என்றும் அதற்கான டி.என்.ஏ சோதனைக்கும் தயார் என்று ஒரு கோரிக்கையும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்ற இரண்டாவது கோரிக்கையையும் அவர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அம்ருதாவின் மனுவை ஐகோர்ட் ஏற்றுக்கொண்டு ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர் சங்கம்

கோலிவுட் திரையுலகின் மிகப்பெரிய பிரச்சனை ஒரு திரைப்படம் வெளியான தினமே ஆன்லைனில் பைரஸி மூலம் திருட்டுத்தனமாக படம் வெளிவருவதுதான்.

ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்று 100 வயது

தற்போது ஒரு ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை என்றாலும் இன்றுடன் அந்த நோட்டுக்கு வயது சரியாக 100 ஆகிறது.

வாங்கிய அட்வான்ஸை வட்டியுடன் திருப்பி கொடுத்த ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் ஓவியா என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய உண்மை, கள்ளங்கபடம் இல்லா மனம் ஆகியவை தமிழக இளைஞர்களை கவர்ந்தது.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு திருமண நிச்சயதார்த்தம்

தமிழ் திரையுலகின் பிரபல இளம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு இன்று திருப்பதியில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றதாகவும் மணப்பெண் பெயர் லட்சியா என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது

முன் ஜாமீன் மனுவை திடீரென வாபஸ் பெற்ற அன்புச்செழியன்

சசிகுமார் உறவினர் அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமானவர் என்று போலீசாரால் தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச்செழியன் நேற்று சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.