நான் தான் ஜெ.மகள்: டி.என்.ஏ சோதனைக்காக நாளை மனுதாக்கல் செய்கிறார் அம்ருதா
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில் அதிமுகவில் உள்ள குழப்பங்கள் இப்போதுதான் ஒருவழியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் திடீரென ஜெயலலிதாவின் மகள் நான் தான் என்று அம்ருதா என்பவர் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், அவரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. இந்த நிலையில் நாளை அம்ருதா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அந்த மனுவில் சுப்ரீம் கோர்ட்டில் வைத்த கோரிக்கையையே ஐகோர்ட்டிலும் அம்ருதா வைப்பார் என தெரிகிறது. அதாவது நான் தான் ஜெயலலிதா மகள் என்றும் அதற்கான டி.என்.ஏ சோதனைக்கும் தயார் என்று ஒரு கோரிக்கையும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்ற இரண்டாவது கோரிக்கையையும் அவர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அம்ருதாவின் மனுவை ஐகோர்ட் ஏற்றுக்கொண்டு ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com