ரஜினியுடன் முதலமைச்சர் மனைவி திடீர் சந்திப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த போது அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாக சில கருத்துக்களை கூறினார். அதுமுதல் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும், வரக்கூடாது என்று சிலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியை அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் அவ்வப்போது சந்தித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் 'காலா' படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றார். ஒருபக்கம் படப்பிடிப்பில் கவனம் செலுத்திய போதிலும், மும்பையில் இருந்து கொண்டே பிரபல தேசிய, மற்றும் மாநில அரசியல் தலைவர்களுடன் இன்னொரு பக்கம் அவர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் அவர்கள் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். வங்கியில் பல வருடங்கள் பணிபுரிந்த அனுபவமுள்ள அம்ருதா ஒருசிறந்த பாடகியும், சமூக சேவகியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூப்பர்ஸ்டார் ரஜினியுடனான இந்த சந்திப்பு தனக்கு மகிழ்ச்சியை தந்ததாகவும், இந்த சந்திப்பின்போது சமூக பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பேசியதாகவும் அம்ருதா ஃபட்னாவிஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இன்னும் ஒருசில மாதங்களில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரு மாநில முதலமைச்சரின் மனைவி அவரை சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com