ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாகும் ஜாக்கிசான் பட நடிகை

  • IndiaGlitz, [Thursday,May 17 2018]

கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் ஒருசில நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பு, நடிப்பு என இரண்டு துறைகளிலும் பேலன்ஸ் செய்து பயணம் செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான 'செம' திரைப்படம் இம்மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ஜாக்கிசான் நடித்த 'குங்பூ யோகா மற்றும் தனுஷ் நடித்த 'அனேகன்' போன்ற படங்களில் நடித்த அம்ரியா தஸ்தூர் இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஃபேண்டஸி 3D படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

கமல், ரஜினி எனது நண்பர்கள் இல்லை: சரத்குமார்

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரையுமே கடந்த சில ஆண்டுகளாக விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் என்பது தெரிந்ததே.

ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்தகட்ட பயணத்தில் கிரிக்கெட் வீர்ர்கள்

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்பட்டு அதற்கான சுவர் விளம்பரம்,பரபரப்பாக நடந்தது. 

அஜித், விஜய்யுடன் தன்னை ஒப்பிட்ட சிவகார்த்திகேயன்

பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடித்துள்ள 'ஒரு குப்பை கதை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

 ரூ.56 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி: எடியூரப்பா போட்ட முதல் உத்தரவு

கர்நாடக சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி எம்.எல்.ஏக்கள் கிடைக்கவில்லை.

முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றுவோம்: குஷ்புவுக்கு காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை

நடிகை குஷ்பு திமுகவில் இருந்தபோது முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றப்பட்டவர். அதே நிலை மீண்டும் ஏற்படும் நிலையை குஷ்பு உருவாக்க வேண்டாம்