மூக்கு வழியாக சென்று மூளையை உண்ணும் அமீபா!!! புதிய நோய்த்தொற்றால் ஏற்பட்ட அதிர்ச்சி!!!

  • IndiaGlitz, [Wednesday,July 08 2020]

 

அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் தற்போது மூக்கு வழியாக மூளையைச் சென்று தாக்கும் அமீபா நோய்த்தொற்றால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நன்னீரில் வாழும் ஒருவகை செல் உயிரினமான அமீபா மூலம் பரவும் நெக்லீரியா ஃபோலெரி என்ற நோய்த்தொற்றை குறித்து தற்போது அமெரிக்க நோய்த்தொற்று மற்றும் கட்டுப்பாட்டு மையம் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது.

கடந்த 1962 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்நோய்த்தொற்றால் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அதையடுத்து தற்போது ஒரு நபர் உயிரிழந்து இருக்கிறார். பெரும்பாலும் கோடை காலத்தில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் இந்த அமீபாக்கள் நீர் நிலைகளில் இருந்து மனிதர்களை தாக்குவதால் நோய்த்தொற்று உண்டாவதாக விஞ்ஞானிகள் தகவல் அளிக்கின்றனர். நன்னீர் நிறைந்த ஏரி, குளம், குட்டை போன்ற இடங்களில் இந்நோய்த்தொற்றை உண்டாக்கும் அமீபாக்கள் வாழ்வதாகவும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது உயிரிழந்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூங்காவிற்கு சென்று விட்டு திரும்பிய பின்பு இந்நோய்த்தொற்றால் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நோய்த்தொற்று ஏற்பட்டால் குறைந்தது ஒரு வார காலத்தில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் ஃப்ளோரிடா மாகாணத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மிக விரைவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் இந்நோய்த் தொற்று குறித்து மக்கள் விழிப்புணடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. குறைந்த குளோரின் உள்ள நீச்சல் குளங்களில் இந்நோய்த்தொற்றை ஏற்படுத்தும் அமீபாக்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

நீச்சல் குளத்தில் உள்ள நீரை ஒருவர் விழுங்குவதால் இந்நோய்த்தொற்று ஏற்படுவதில்லை. அசுத்தமான நீரில் இருக்கும் இந்த வகை அமீபாக்கள் மூக்கு வழியாக மூளைக்குச் சென்று பாதிப்பை உண்டாக்கும் திறனைக் கொண்டது. மூக்கு வழியாக சென்ற அமீபா 1 முதல் 9 நாட்களுக்குள் அதிக பாதிப்பை உண்டாக்கி விடும் எனவும் நோய்த்தொற்று ஏற்பட்ட 18 நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டின் நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மேலும் நோயின் முதற்கட்டமாக தலைவலி, காய்ச்சல், வாந்தி, கழுத்து இறுக்கம் போன்ற அறிகுறிகளையும் இது வெளிப்படுத்தும் எனவும் எச்சரிச்சை செய்துள்ளனர்.

இரண்டாவது கட்டமாக இந்நோய்த்தொற்று கோமா போன்ற கடுமையான பாதிப்புகளை வெளிப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இந்நோய்த்தொற்று விரைவாகவே அறிகுறிகளை வெளிப்படுத்துவதால் நீச்சல் போன்ற செயலுக்குப் பின்னர் உண்டாகும் அறிகுறிகளைக் குறித்து கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒரு மனிதரிடமிருந்து மற்றவருக்கு இந்நோய்த்தொற்று பரவ வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. மிக அரிதாகவே இந்நோய்த்தொற்று அமீபாவிடம் இருந்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் சுகாதாரத் துறை தெளிவுப்படுத்தி இருக்கிறது.

More News

குடிகாரர் செய்த அலப்பறை, பொக்லைன் இயந்திரத்தால் தள்ளிய டிரைவர்: வைரலாகும் வீடியோ

தெலங்கானா மாநிலத்தில் மது அருந்தி அலப்பறை செய்த ஒருவரை பொக்லைன் வாகன டிரைவர் பொக்லைன் இயந்திரத்தால் அந்த குடிகாரர்களை தள்ளி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

என்னை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்: பள்ளி குரூப் புகைப்படத்தை பதிவு செய்த 'பாகுபலி' நடிகை

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் திரையுலகில் இருந்தாலும் அவருக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்தது ஒரு சில கேரக்டர் மட்டுமே.

கணவரை தேடி வீட்டுக்கு வந்த இளம்பெண்: தீக்குளித்து இறந்த மனைவி!

தனது கணவரை தன்னுடைய கணவர் என்று வீட்டுக்கு இளம்பெண் ஒருவர் வந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் 19 வயது இளம்பெண் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் திருச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா??? பீதியைக் கிளப்பும் புதுத் தகவல்!!!

கொரோனா வைரஸ் பரவும் தன்மை குறித்தும் அதன் மரபணு குறித்தும் புதுப்புது ஆய்வுத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

குழந்தைகள் விரும்பி உண்ணும் நூடுல்ஸ் உடலுக்கு நல்லதா??? நூடுல்ஸ் பிறந்த கதை!!!

உருவத்தில் நம்ம ஊரு இடியாப்பத்தைப் போலவே இருக்கும் நூடுல்ஸ் உலகம் முழுவதும் விரும்பப்படும் ஒரு உணவு வகையாக இருக்கிறது.