close
Choose your channels

'குக் வித் கோமாளி' பிரபலத்தை காதலிக்கும் அம்மு அபிராமி? உறுதி செய்த வீடியோ..!

Wednesday, June 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ராட்சசன்’ ’அசுரன்’ உள்ளிட்ட படங்களிலும்’ குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட நடிகை அம்மு அபிராமி, குக் வித் கோமாளி பிரபலத்தை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் இந்த காதல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்த ’பைரவா’ உட்பட சில படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் நடித்த நடிகை அம்மு அபிராமிவுக்கு திருப்புமுனையாக ’ராட்சசன்’ படம் அமைந்தது என்பதும் அதன் பின் ’அசுரன்’ திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து கலக்கி இருந்தார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமுதா அபிராமி, அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னர் அப் இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இயக்குனராக இருந்த பார்த்திபனுக்கும் அம்மு அபிராமிக்கும் காதல் என்று கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது பார்த்திபனின் பிறந்தநாளில் அவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பதிவு செய்து பிறந்த நாள் வாழ்த்துக்களை அம்மு அபிராமி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் ’பிறந்ததற்கு நன்றி.. வாழ்வில் வந்ததற்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து இருவரும் காதலிக்கிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment