அமரர் ஆகியும் அன்னமிட்ட புரட்சி தலைவி.
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வராக இருந்தபோதே உயிரிழந்த புரட்சி தலைவி அம்மா அவர்களின் இறுதி சடங்கு சற்று முன் முடிவடைந்தது. அவரது ஆன்மா சாந்தியடைய கோடானு கோடி தமிழக மக்கள் இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பொதுவாக ஒரு தலைவர் மறைந்தால் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் தங்கத்தாரகை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகம் எவ்வாறு அமைதிப்பூங்காவாக இருந்ததோ அதேபோல், அவர் மறைந்த பின்னரும் எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் அவரது இறுதிச்சடங்கு நடந்து முடிந்தது. தமிழகத்தின் எந்த பகுதியிலும் வன்முறை நடந்ததாக செய்திகள் இல்லை.
அதே நேரத்தில் சென்னையின் பிறபகுதியில் இருந்தும், தமிழகத்தின் பிற பகுதியில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னைக்கு ஜெயலலிதாவின் முகத்தை இறுதியாக பார்க்க வந்திருந்தனர். ஆனால் அவர்களுடைய உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று சென்னையில் ஓட்டல்கள் உள்பட எந்தவித கடைகளும் திறக்கப்படவில்லை.
ஆனால் அம்மா' அவர்கள் தனது பொற்கரங்களால் ஆரம்பித்து வைத்த 'அம்மா உணவகங்கள்' மட்டும் இன்று திறந்திருந்தன. 'அன்னமிட்ட கை' அம்மாவை இறுதியாக பார்க்க வந்த தொண்டர்களுக்கு அம்மா உணவகத்தில் இன்று இலவசமாகவே உணவுகள் வழங்கப்பட்டது.
உயிரோடு இருந்தபோதும் மக்களின் பசியை போக்கிய அம்மா, அமரர் ஆகிய பின்னரும் அனைவருக்கும் அன்னமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அப்படிப்பட்ட புகழ்மிக்க 'அம்மா'வின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout