போயஸ் கார்டன் 'வேதா இல்லம்' அம்மாவின் நினைவு இல்லமாக மாறுமா?
- IndiaGlitz, [Wednesday,December 07 2016]
புரட்சி தலைவி செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி என்ன ஆகுமோ என்று பலரது எண்ணமாக உள்ளது. இப்போதைக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றாலும் இன்னும் சில நாட்கள் கழித்து பிரச்சனைகள் வரலாம். அப்படி வந்தால் நிச்சயம் கட்சியை காப்பாற்றவும் ஒரு தலைவரும் தோன்றலாம். இப்போது அது பிரச்சனை இல்லை.
தற்போது முதல்கட்டமாக செய்ய வேண்டியது, மக்களின் தலைவராக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வேதா இல்லம்' அவரது நினைவு இல்லமாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான். தனியார் ஒருவருக்கு சொந்தமாகிவிடுமோ என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தமிழக அரசே முன்வந்து இதை முதலில் செய்ய வேண்டும்
ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த 'வேதா இல்லம்' பாதுகாக்கப்பட்டு மக்கள் சென்று வரும் நினைவு இல்லமாக மாறவேண்டும் என்பதே ஒவ்வொரு அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழக அரசே முன்வந்து 'வேதா இல்லத்தை' நினைவு சின்னமாக அறிவித்தால் சென்னைக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் இந்த நினைவு இல்லத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். பல சரித்திர சாதனை செய்து மறைந்த ஒரு தலைவியின் இல்லத்தை பாதுகாக்க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே அனைவரின் விருப்பமாக உள்ளது.