தவறான தலைமையால் கஷ்டப்படுகிறோம்: 'தர்மபிரபு' ஆடியோ விழாவில் டி.சிவா

  • IndiaGlitz, [Saturday,May 04 2019]

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள 'தர்மபிரபு' படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் யோகிபாபு உள்பட படக்குழுவினர்களும் சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது, 'புக் மை ஷோவில் ஒரு சினிமா டிக்கெட் புக் செய்தால் இப்போது ரூ 40 ஆகிவிட்டது. தயாரிப்பாளர்கள் யாரிடமும் சொல்ல முடியாமல் அனாதை போல் தவிக்கிறார்கள். தவறான தலைமையால் கஷ்டப்படுகிறோம். அரசாங்கத்திடம் முறையிட்டால் எல்லாம் சரியாகும். அதை செய்ய ஆளில்லை' என்று கூறினார். மேலும் 'தர்மபிரபு' படத்தில் எல்லாரையும் வச்சி செஞ்சுருக்காங்க' என்று படக்குழுவினர்களை பாராட்டிய டி.சிவா, 'கடவுள் அனைத்தையும் அவ்வளவு எளிதில் யாருக்கும் கொடுத்துவிட மாட்டார். ஆனால் யோகிபாபு அதிர்ஷ்டசாலி' என்று கூறினார்.

இந்த படத்தின் இயக்குனர் முத்துகுமரன் பேசியபோது, 'நானும் யோகிபாபுவும் ஒரே அறையில் தங்கியிருந்து சினிமா வாய்ப்பு தேடியவர்கள். பத்து வருடத்திற்கு முன்பே இந்த கதையை நான் அவரிடம் கூறியிருந்தேன். இந்த படத்தில் இன்றைய அரசியல் நிறைய இருக்கும்' என்று கூறினார்.

More News

சினிமா வாய்ப்பை நம்பி வாழ்க்கையை தொலைத்த மாணவி! திடுக்கிடும் தகவல்

 நடனப்பள்ளி மாணவர் ஒருவர் சினிமா வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறிய நடன இயக்குனரை நம்பியதால் இன்று பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வாழ்க்கையையே தொலைத்த திடுக்கிடும் சம்பவம் ஒன்று

உங்க வேலையை முதலில் சரியா பாருங்க! பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி

குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியின் அம்பாசிடராக நடிகை வரலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8 பேர் பலி, பல ஆயிரம் கோடி சேதம்: ஃபானி புயலால் உருக்குலைந்த ஒடிஷா!

நேற்று ஒடிஷா மாநிலம் வழியே கரையை கடந்த ஃபானி புயல், அம்மாநிலத்தின் பெரும்பகுதியை உருக்குலைய செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்தும் மறுகூட்டலுக்கு சென்ற மாணவி!

தேர்வு முடிவுகள் வரும்போது பாஸ் ஆகிவிட்டாலே மாணவர்கள் திருப்தி அடைந்து கொள்வார்கள். மொத்த மதிப்பெண்கள் குறித்து கவலைப்படவே மாட்டார்கள்.

3 பேர் உயிரிழப்பு, கோடிக்கணக்கில் பொருட்சேதம்; கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல்

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிதீவிர புயலாக உருவாகியதால் இந்த புயல் ஏற்படுத்தும் சேதம் மிக அதிகமாக இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.