கேப்டன் என்பது ஒரு மந்திரசொல்: விஜய்காந்த் குறித்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
கேப்டன் அது எனக்கு ஒரு மந்திரச்சொல். இப்போது கேப்டனை பற்றி நினைத்தாலும் ஆயிரமாயிரம் நினைவுகள் என்னை சுற்றி வந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு மனிதரை, அப்படி ஒரு நல்லவரை அப்படி ஒரு எளியவரை உலகில் சந்திப்பது மிக அபூர்வம். நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாக்கியம் என்னவெனில் அந்த மனிதரோடு சில ஆண்டுகள் ஒன்றாக பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதுதான். அந்த ராஜா பாதர் தெருவில் மாடியிலே அவர் கூடவே சில ஆண்டுகள் வாழ்ந்து, பயணித்து, அவரது அன்பையும் ஆதரவையும் பெற்றது எனக்கு மிகப்பெரிய பெருமை இருக்கிறது
கேப்டன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்புற்று வாழவேண்டும், அவரது நல்ல மனசுக்கு ஒரு குறையும் அவருக்கு வரக்கூடாது. மீண்டும் அவர் சிங்கமாக எழுந்து வரவேண்டும். அவர் செய்த புண்ணியங்களும் தர்மங்களும் உதவிகளும் அளவற்றது, எண்ணிலடங்காதது, ஏட்டில் அடங்காது. அப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதர், பிறந்தநாளை பிறந்த நாளில் வணங்குகிறேன் என்பதைவிட ஒவ்வொரு நாளும் அவரை வணங்குகிறேன்
சினிமாவில் எனக்கு கிடைத்த அங்கீகாரம் எல்லாமே நம்முடைய புரட்சிக்கலைஞர் கொடுத்தது தான். அம்மா கிரியேஷன்ஸ் சிவா என்பதைவிட விஜயகாந்த் ஆபீஸ் சிவா என்று தான் முதலில் அறியப்பட்டேன். அதன்பிறகுதான் நான் அம்மா கிரியேஷன்ஸ் சிவா. ,அந்த நன்றியை, அந்த அன்பை என்றென்றும் மறக்க மாட்டேன். கேப்டனுடன் வாழ்ந்த வாழ்க்கை, அந்த அனுபவங்கள் உயிர் உள்ளவரை அசை போட்டுக் கொண்டே இருப்பேன்’ இவ்வாறு அம்மா கிரியேஷன்ஸ் சிவா தெரிவித்துள்ளார்.
Producer Amma Creations T.Siva wishes Captain Vijaykanth for his birthday...#HBDVijayakanth #HBDCaptainVijayakanth @Amma_Creations @TSivaAmma pic.twitter.com/x14mZr3npB
— Karthik Ravivarma (@Karthikravivarm) August 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com