பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்தில் திருட்டு: சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,July 19 2020]

சென்னையில் பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம கும்பல் ஒன்று பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடிச்சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவர் சிவா. அம்மா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் உள்ள இவரது அலுவலகம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்ற ஊழியர்கள், அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே உள்ளே சென்று பார்த்த போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த கேமரா மற்றும் 250 கிராம் எடை கொண்ட வெள்ளி சாமி சிலை ஆகியவவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சிவா தரப்பினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, திருடி சென்ற மர்ம கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 

More News

ஃபேஸ்புக் மூலம் வீசிய காதல் வலை: இளைஞரிடம் ஏமாந்த 28 வயது திருமணமான பெண்!

ஃபேஸ்புக் மூலம் பேசிய காதல் வலையில் விழுந்த திருமணமான 28 வயது பெண் ஒருவர், 30 சவரன் நகை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சின்னத்திரை படப்பிடிப்பில் திடீர் தீவிபத்து: நூலிழையில் உயிர்தப்பிய நடிகர், நடிகைகள்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் இருந்துவரும் காரணத்தால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன

இன்று ஒரே நாளில் 88 பேர் பலி: அதிகரிக்கும் கொரோனா பலியால் பரபரப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது மட்டுமின்றி கடந்த சில நாட்களாக கொரோனாவால் பலியாகும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது

15 வயது மாணவனுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய 29 வயது ஆசிரியை!

29 வயது ஆசிரியை ஒருவர் தன்னிடம் படித்து வந்த 15 வயது மாணவனுக்கு ஆபாசப்படம் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு ப்பிறப்பிக்கப்பட்டிருந்தும் கொரோனா வைரஸ் குறைந்தபாடில்லை