ரஜினியுடன் கூட்டணியா? அமித்ஷாவின் அதிரடி பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் குதிக்க இருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி அதனையே அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தார்
இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கவும் கூட்டணி அமைக்கவும் முதல்வர் வேட்பாளரை அறிவித்தும் வருகின்றன
ஆனால் ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கும் அறிவிப்பையே செய்யவில்லை என்பதால் அவர் அரசியலுக்கு வருவாரா? வந்தாலும் தனித்து போட்டியிடுவாரா? அல்லது கூட்டணியுடன் போட்டியிடுவாரா? போன்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் ரஜினியுடன் பாஜக கூட்டணி வைப்பது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித்ஷா, ‘ரஜினியுடன் கரம் கோர்ப்பது குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் இருக்கின்றது என்றும் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கே வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
ரஜினி பாஜக ஆதரவாளர் என்றும் அவர் கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவுடன் தான் கூட்டணி வைப்பார் என்றும் கூறப்படும் நிலையில் அமித்ஷாவின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments