மீண்டும் தென்னிந்திய படத்தில் அமிதாப்பச்சன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பாகுபலி’ நாயகன் பிரபாஸ் தற்போது ’ராதே ஷ்யாம்’ மற்றும் ’நடிகையர் திலகம்’ இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் மூன்றாம் உலகப் போர் குறித்த பான் இந்தியா திரைப்படம் என்பதும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் 21-வது படமாக உருவாகும் இந்த படத்தில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிரஞ்சீயின் ‘சயிர நரசிம்மரெட்டி’ படத்தில் நடித்த அமிதாப், தற்போது ‘உயர்ந்த மனிதன்’ என்ற தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் அவர் ஒரு தென்னிந்திய படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நாளை மறுநாள் அமிதாப் தனது பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் இன்றே அவரது தென்னிந்திய ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை இந்த அறிவிப்பின்மூலம் ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது