பெற்றோர் வசித்த வீட்டை திடீரென விற்ற அமிதாப் பச்சன்… என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் “பிக் பி“ என அழைக்கப்படும் நட்சத்திர நடிகரான நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் தனது பெற்றோர் வசித்துவந்த வீட்டை திடீரென விற்பனை செய்துள்ளார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் மும்பையின் ஜுஹு பகுதியில் தற்போது வசித்துவருகிறார். 2 மாடிக்கொண்ட இந்த வீடு 10,125 சதுர அடி பரப்புக் கொண்டது. இதைத்தவிர மும்பையில் மற்றொரு வீடும் இவருக்கு சொந்தமாக இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் அவருடைய பெற்றோர் ஹரிவன்ஷ்ராய் பச்சன் மற்றும் தேஜிபச்சன் இருவரும் வசித்துவந்த வீட்டை அவர் விற்பனை செய்துள்ளார்.
தற்போது 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த இந்த வீட்டில் நீண்டகாலமாக யாருமே தங்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதையடுத்து அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் இருந்த அவ்னி பேடர் என்பவரே இந்த வீட்டை வாங்கியுள்ளார். இதுகுறித்துப் பேசிய பேடர் நீண்டநாள் நண்பரான அமிதாப்பின் வீட்டையே வாங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments