'என்ன ஒரு அருமையான பரிசு': சூப்பர் ஸ்டாரின் மகளுக்கு அமிதாப் வாழ்த்து!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது மகள் எழுதிய புத்தகம் ஒன்றை அமிதாப்பச்சனுக்கு அனுப்பிய நிலையில் அந்த புத்தகத்தை பார்த்து ’என்ன ஒரு அருமையான பரிசு’ என்று அமிதாப் பச்சன் டுவிட் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2’ திரைப்படம் சமீபத்தில் அமேசானில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மோகன்லால் தனது மகள் விஸ்மயா எழுதிய ’கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகத்தை பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அனுப்பி வைத்தார். இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் மோகன்லால் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பரிசை அனுப்பி இருக்கிறார். அவரது மகள் விஸ்மயா எழுதிய ’கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகத்தை எனக்கு அனுப்பி உள்ளார். உணர்வுபூர்வமான கவிதைகள் மற்றும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தகத்தை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். மோகன்லால் மகளின் திறமைகள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அமிதாப்பச்சனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

More News

'குக் வித் கோமாளி' சீசன் 2: இந்த வாரம் புகழ், ஷிவாங்கிக்கு கொண்டாட்டம் தான்!

'குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் மிகப்பெரிய வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

'மாஸ்டர்' பாணியில் ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் 'வலிமை'?

'மாஸ்டர்' பாணியில் திரைக்கு வந்த இரண்டே வாரங்களில் ஓடிடியில் 'வலிமை' படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

'தல' அஜித்தின் வெறித்தனமான ரசிகர் திடீர் தற்கொலை!

தல அஜித்தின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட தகவல் அஜித் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பரத் ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை: டைட்டில் அறிவிப்பு

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர், பரத் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது

அடுத்த முதல்வர் யார்? சர்வேயில் முன்னிலை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகச் சட்டச்சபை தேர்தலையொட்டி அரசியல் களம் களைக்கட்டி வருகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட சர்வே முடிவுகளில் விரும்பப்படுகிற முதல்வர்