'என்ன ஒரு அருமையான பரிசு': சூப்பர் ஸ்டாரின் மகளுக்கு அமிதாப் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது மகள் எழுதிய புத்தகம் ஒன்றை அமிதாப்பச்சனுக்கு அனுப்பிய நிலையில் அந்த புத்தகத்தை பார்த்து ’என்ன ஒரு அருமையான பரிசு’ என்று அமிதாப் பச்சன் டுவிட் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2’ திரைப்படம் சமீபத்தில் அமேசானில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மோகன்லால் தனது மகள் விஸ்மயா எழுதிய ’கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகத்தை பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அனுப்பி வைத்தார். இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் மோகன்லால் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பரிசை அனுப்பி இருக்கிறார். அவரது மகள் விஸ்மயா எழுதிய ’கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகத்தை எனக்கு அனுப்பி உள்ளார். உணர்வுபூர்வமான கவிதைகள் மற்றும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தகத்தை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். மோகன்லால் மகளின் திறமைகள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அமிதாப்பச்சனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
T 3823 - MohanLal , superstar pf Malayalam Cinema and one that I have immense admiration of , sends me a book,
— Amitabh Bachchan (@SrBachchan) February 23, 2021
"Grains of Stardust", written & illustrated by his daughter Vismaya ..
A most creative sensitive journey of poems and paintings ..
Talent is hereditary ! My best wishes pic.twitter.com/KPmojUbxhk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com