தமிழ்ப்படத்திற்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அமிதாப்பச்சன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும், அந்த படத்திற்கு 'உயர்ந்த மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரை சமீபத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்திற்காக அமிதாப்பச்சன் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அமிதாப் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஒரே ஷெட்யூலில் முடிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை தமிழ்வாணன் இயக்கவுள்ளார். இவர் எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த 'கள்வனின் காதலி' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படம் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments