அமிதாப், அபிஷேக் சுமந்து சென்ற உடல் யாருடையது தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக்பச்சனும் மரணம் அடைந்த ஒருவரின் உடலை இடுகாடு வரை சுமந்து சென்று இறுதிச்சடங்கை நடத்தியுள்ளனர். அந்த உடல் பெரிய நடிகரோ, அரசியல்வாதியோ அல்லது விவிஐபியின் உடலோ அல்ல, அமிதாப் வீட்டில் சுமார் 40 வருடங்கள் வேலை பார்த்த வேலைக்காரரின் உடல் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைக்காரர்களை அடிமைபோல் பலர் நடத்தி வரும் நிலையில் தன் வீட்டில் வேலை பார்த்தவர்களை தனது குடும்பத்தினர்கள் போல் அன்பு செலுத்தி வருபவர் நடிகர் அமிதாப் என்று ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் தன் வீட்டில் 40 வருடம் வேலை பார்த்தவரின் இறுதிசடங்கில் கலந்து கொண்டதோடு, அவரின் உடலை அமிதாபச்சனும் அவரது மகன் அபிஷேக்பச்சனும் சுமந்து சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி அமிதாப் மீதான மரியாதையை இன்னும் உயர்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com