சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்த அமிதாப்பச்சன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படமான 'உயர்ந்த மனிதன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இயக்குனர் தமிழ்வாணன் இயக்கி வரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த ஒரு ஸ்டில்லை அமிதாப்பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் சுவரில் சிவாஜி கணேசனின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய அமிதாப்பச்சன், 'சிவாஜி கணேசன் என்ற மாஸ்டரின் கீழ் அவரது சீடர்களாகிய நானும் சூர்யாவும் உள்ளோம். தமிழ் சினிமாவின் பொக்கிஷம் சிவாஜி கணேசன். அவருடைய படத்தை சுவரில் மாட்டி அவரது பாதம் தொட்டு வணங்கி மரியாதை செய்தோம். அவர் மாஸ்டர்.. நாம் அவருடைய சீடர்கள்' என்று பதிவு செய்துள்ளார்.
சிவாஜி கணேசன் நடித்த 'கை கொடுத்த தெய்வம்' என்ற படத்தின் இந்தி ரீமேக் படமான 'பியார் கி கஹான்' என்ற படத்தில் அமிதாப் நடித்துள்ளார் என்பதும், தற்போது அவர் நடித்து வரும் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தின் டைட்டிலில் கடந்த 1968ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்று வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது
T 3141 - Two disciples under the shadow of the MASTER - Shivaji Ganesan ..
— Amitabh Bachchan (@SrBachchan) April 3, 2019
Surya and self !
Shivaji the Ultimate Iconic Legend of Tamil Cinema .. his picture adorns the wall .. my respect and admiration ,?? i touch his feet !
அவர் மாஸ்டர் .. நாம் அவருடைய சீடர்கள் pic.twitter.com/u4dGGQE1Bd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments