அமிதாப் அறிவுரையை கடைபிடிக்க தவறிய ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Tuesday,December 17 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று ’தர்பார்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்

இந்த ட்ரெய்லர் விழாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தனக்கு மூன்று அறிவுரை கூறியதாகவும் அந்த அறிவுரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்

முதல் அறிவுரையாக தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் இரண்டாவது அறிவுரையாக எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும் என்றும் மூன்றாவது அறிவுரையாக எந்த காரணத்தை முன்னிட்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்

ஆனால் முதல் இரண்டு அறிவுரைகளை தம்மால் தொடர முடிந்தது என்றும் ஆனால் மூன்றாவது அறிவுரையை தொடர முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். இதிலிருந்து அவர் அரசியலுக்கு வர உள்ளது உறுதியாகிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் அமிதாப்பின் அறிவுரையை அவர் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தர்பார் படத்தின் டிரைலர் வெளியான 12 மணி நேரத்தில் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது