சிகிச்சையில் இருக்கும் அமிதாப் பார்த்து அசந்த இளம்பெண்ணின் வீடியோ!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. விரைவில் நால்வரும் முழுமையாக கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அமிதாப்பச்சனும் அவருடைய குடும்பத்தினரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்திய திரையுலகினர்களும் பிரார்த்தனை செய்தும், வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அமிதாப், தனது நண்பர் அனுப்பிய வீடியோ ஒன்றை பார்த்து ஆச்சரியம் அடைந்து இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். கர்நாடிக் மற்றும் மேற்கிந்திய இசையை கலந்து ஒரு இளம்பெண் பாடும் இந்த வீடியோ குறித்து அவர் கூறியிருப்பதாவது:

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த வீடியோவை எனக்கு அனுப்பினர். நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். நீங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த திறமையாளர். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். இந்த நல்ல முயற்சியை தொடருங்கள். மருத்துவமனையில் இருக்கும் எனது இன்றைய நாளை நீங்கள் பிரகாசமாக்கியுள்ளீர்கள். கர்நாடிக் மற்றும் வெஸ்டர்ன் பாப் கலந்தது ஆச்சரியமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.