கொரோனாவில் இருந்து குணமானார் அமிதாப்: அபிஷேக் நிலை என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதனை தொடர்ந்து ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நால்வரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்
அமிதாப் மற்றும் அபிஷேக் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அமிதாப்பச்சனும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அமிதாப் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் இருப்பினும் அபிஷேக் பச்சன் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் அவரும் விரைவில் குணமாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது
இதுகுறித்து அபிஷேக் பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’இன்று நான் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளேன். இருப்பினும் வீட்டில் தனிமைப்படுத்தப்பபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்
T 3613 - I have tested CoVid- have been discharged. I am back home in solitary quarantine.
— Amitabh Bachchan (@SrBachchan) August 2, 2020
Grace of the Almighty, blessings of Ma Babuji, prayers & duas of near & dear & friends fans EF .. and the excellent care and nursing at Nanavati made it possible for me to see this day . pic.twitter.com/76jWbN5hvM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments