திருடர்களை விரட்டியடித்த நெல்லை முதியவர்களுக்கு பிரபல நடிகர்  பாராட்டு!

  • IndiaGlitz, [Tuesday,August 13 2019]

சமீபத்தில் நெல்லை அருகே ஒரு வயதான தம்பதியர்களை இரண்டு திருடர்கள் கையில் ஆயுதங்களுடன் தாக்க முற்படுகையில் வயதான முதியவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து அந்த திருடர்களை கையில் கிடைத்ததை எல்லாம் வீசி எறிந்து விரட்டி அடித்தனர். செருப்பு, நாற்காலி உட்பட பல பொருள்களை அந்தத் திருடர்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக வயதான தம்பதிகள் வீசியதால் நிலைகுலைந்த திருடர்கள் ஒரு கட்டத்தில் அந்த பெண்மணி கழுத்தில் உள்ள செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்

இந்த முதிய தம்பதிகளின் வீரமான செயல் சிசிடிவி காட்சி மூலம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்த தம்பதிகளுக்கு சமூக வலைதள பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்று வீடியோவை வெளியிட்டிருந்தது

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்தத் தம்பதிகளின் வீரத்திற்கு தனது வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார். அமிதாப்பின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

More News

'நேர்கொண்ட பார்வை' படம் பார்த்து குற்ற உணர்ச்சி ஏற்பட்டது: பிரபல இயக்குனர்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 8ஆம் தேதி வெளியாகி ஆறாவது நாளான இன்றும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் படத்தை அடுத்து மேலும் பிரபல நடிகரின் படத்தில் மீராமிதுன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன், சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக காணப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சக போட்டியாளர்கள் மீது பழிசுமத்துவது

ஜெயம் ரவியின் 'கோமாளி' ரன்னிங் டைம்!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது

வனிதா பற்ற வச்ச நெருப்பால் பொங்கி எழுந்த அபிராமி: டென்ஷன் ஆன முகின்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வரவு நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த அளவுக்கு உடனே பற்ற வைக்கும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

'கேம் இனிமேல் தான் ஆரம்பம்: ஹவுஸ்மேட்ஸ்களை வெளுத்து வாங்கிய வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்ன? இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இந்த நிகழ்ச்சியால் மக்கள் தெரிந்து கொள்வது என்ன? என்பது தெரியாமலேயே இதுவொரு விளையாட்டு ஷோ என