அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கடந்த 15ஆம் தேதி நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் கடந்த மூன்று நாட்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவுக்கு இணையான தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரைப் பார்க்க குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாருக்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அமிதாப்பச்சன் கடந்த 1982ஆம் ஆண்டு ‘கூலி’ என்ற படத்தில் நடித்தபோது அவருக்கு விபத்து ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அமிதாப்புக்கு 'ஹெப்பாடிடீஸ் பி' வைரஸ் உள்ள ரத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டு அதன்பின் பலமுறை அவர் உடல்நலகுறைவால் அவதியுற்று வருகிறார். இருப்பினும் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணிகளை செய்து சுறுசுறுப்பாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரிஷிகேஷில் ரஜினிகாந்த் வாங்கிய புத்தகம்: வைரலாகும் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடிந்த பின்னர், பத்து நாள் ஆன்மீகச் சுற்றுப் பயணமாக இமயமலையில் உள்ள கேதார்நாத்,

தீபாவளி தினத்தில் திடீரென களத்தில் குதிக்கும் ஜெயம் ரவி திரைப்படம்

வரும் தீபாவளி தின விருந்தாக விஜய்யின் 'பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் திடீரென தீபாவளி களத்தில் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படமும் குதித்துள்ளது 

நயன்தாராவின் 'நெற்றிக்கண்' குறித்த புதிய அப்டேட்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் ராவ் இயக்கி வரும்'நெற்றிக்கண்'என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விஷாலின் 'ஆக்சன்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆக்சன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயார் நிலையில் உள்ளது

'பிகில்' பெயரை விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்ட கதை என்பதால் இந்த படத்தில் கால்பந்து போட்டிகள் குறித்தும், விளையாட்டில் உள்ள அரசியல் குறித்தும்