அமிதாப்பச்சன் திடீரென மருத்துவமனையில் அனுமதி.. ஒரு மணி நேரத்திற்கு முந்தைய எக்ஸ் பதிவு வைரல்..!
- IndiaGlitz, [Friday,March 15 2024]
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன் அவர் ஒரு மணி நேரத்திற்கு முன்பு எக்ஸ் தளத்தில் செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக அமிதாப்பச்சன் இருந்து வருகிறார் என்பதும் தற்போது அவருக்கு 81 வயது ஆன போதிலும் அவர் தனது வயதுக்கேற்ற கேரக்டர்களை ஏற்று நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அமிதாபச்சன் உடல்நிலை பிரச்சினைகளை அடிக்கடி சந்தித்து வருகிறார் என்பதும் குறிப்பாக இந்த ஆண்டு தான் அவருக்கு மணிக்கட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டார் என்பதும் அதன் பின் அவர் தனது உடல்நிலையை கவனமாக பார்த்து வந்தாலும் அவ்வப்போது சில பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று திடீரென அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ’நன்றி உணர்வுடன் எப்போதும்’ என்று பதிவு செய்திருப்பது வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் அமிதாப்பச்சனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டிருப்பதாகவும் இது இதய நோய்க்கு செய்யப்படும் சிகிச்சை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்தோ அல்லது மருத்துவமனையில் இருந்தோ அதிகாரபூர்வமாக அமிதாப்பச்சன் உடல்நிலை குறித்த எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப்பச்சன் அவர்கள் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
T 4950 - in gratitude ever ..
— Amitabh Bachchan (@SrBachchan) March 15, 2024