'பொன்னியின் செல்வன்' படத்தில் அமிதாப்பச்சன்- ஐஸ்வர்யாராய்?

  • IndiaGlitz, [Friday,January 04 2019]

'பொன்னியின் செல்வன்' என்ற கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர். , சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்பட பலர் முயற்சி செய்தனர். ஆனால் இதுவரை அது நிறைவேறவில்லை

இந்த நிலையில் 'செக்க சிவந்த வானம்' வெற்றிப்படத்தை அடுத்து 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்க இயக்குனர் மணிரத்னம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி, உள்பட மல்டி ஸ்டார்கள் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய இரண்டு கேரக்டர்களில் அமிதப்பச்சன், ஐஸ்வர்யாராயை நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே இருவர், 'குரு' மற்றும் 'ராவணன்' படங்களில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விஸ்வாசம்' படத்தின் சென்னை தியேட்டர் லிஸ்ட் இதோ:

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

தென்காசியில் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.

'தளபதி 63' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 63' படத்தை இயக்கும் அட்லி கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் பணிகளை கவனித்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

வீரம்-விஸ்வாசம்: 4 படங்களின் ரன்னிங் டைமில் உள்ள ஒற்றுமை

அஜித், சிவா கூட்டணியில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் ரன்னிங் டைம் 152 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்ற அதிகாரபூர்வ தகவல் சற்றுமுன் வெளிவந்துள்ளது.

'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களின் ரன்னிங் டைம்கள்

ஜனவரி 10ஆம் தேதி தலைவர் ரஜினியின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின் ரன்னிங் டைம்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.